புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்து போலீஸ் நடவடிக்கை.
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்து புதுச்சேரி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஏ.ஐ.டி.யு.சி, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…