டெல்லி:இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை.
திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார்.நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர்.
சந்திப்பு நிறைவு:
இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.முதல்வர் பிரதமரின் இந்த சந்திப்பு 30 நிமிடங்களில் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
பிரதமரிடம் பேசியது என்ன?:
இந்நிலையில்,இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள்,உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுத்து உதவ அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
அதன்படி,இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக இலங்கை தமிழர்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பச்சிளம் குழந்தையுடன் ஆபத்தான கடல் பயணம்:
ஆபத்தான கடல் பயணத்தில் பச்சிளம் குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் 16 பேர் தமிழகம் வந்த நிலையிலும்,இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் மேலும் தமிழகம் வரும் சூழலிலும் பிரதமரிடம் முதல்வர் இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய கோரிக்கைகள்:
மேலும்,மேகதாது விவகாரம்,நீட் விலக்கு,தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவித்தல்,மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம்,மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி,ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…