#Breaking:தமிழகத்திற்கு உடனடியாக 30.6 டிஎம்சி நீர் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு….!

தமிழகத்திற்கு உடனடியாக 30.6 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம்,நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான, சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.மேலும்,கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை பற்றி விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில்,தமிழகத்திற்கு ஜூன்,ஜுலை,ஆகஸ்ட் மாதங்களுக்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி நிலுவையை உடனே தரவேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025