BREAKING :உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் 25 வயது இளைஞர் உயிரிழப்பு.!

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397 லிருந்து 1637 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 133 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241 , தமிழ்நாடு 124 , டெல்லி 120 உத்தரபிரதேசம் 103, உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த மார்ச் 28- ம் தேதி அந்த இளைஞரை அவரது உறவினர்கள் அழைத்து வந்ததாகவும், அப்போது சுவாசப் பிரச்சினைகள் இருப்பதாக கூறியதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025