#Breaking : மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் 2 விமானங்கள் கீழே விழுந்து விபத்து.!
மத்திய பிரதேசத்தில் இந்திய விமான படைக்கு சொந்தமான 2 விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது
மத்திய பிரதேசத்தில் 2 விமான படை விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்த இரண்டு விமானங்களும் இந்திய விமான படைக்கு சொந்தமான விமானங்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரண்டு விமானங்கள் கீழே விழுந்துள்ளது.
குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து இந்த இரண்டு விமானங்களும் பயிற்சிக்காக புறப்பட்டுள்ளன. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 2 விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகும் பொழுது இரண்டு விமானிகளும் விமானத்திற்குள் இருந்துள்ளனர் என்று தகவல்கள் உள்ளன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிககளை தொடங்கினர். இந்த விபத்துக்குறித்த காரண என்னவென்று இன்னும் கண்டறிய படவில்லை என்றும் விமானிகளை தேடுவதற்கான மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.