#Breaking : வாரம் 2 நாட்கள் சுருக்கும்டி வலையை பயன்படுத்த அனுமதி – உச்சநீதிமன்றம்
12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி.
தமிழக அரசு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், இதற்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது என்பது சட்ட விரோதம். குறிப்பாக கடலில் 12 நாட்டிக்கல் மைல்கள் தாண்டி மீன்பிடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு சென்று மீன்பிடித்தாலும் அவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகவும், வலைகள் பறிமுதல் செய்யப்படுவதாகும் அபராதங்கள் விதிக்கப்படுகிறது. இதனால் சுருக்கும்மடி வலைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுருக்குமடி வலை என்பது ஒரு ஹெக்டேர் அளவு கொண்டது. அது மூன்று கால்பந்தாட்ட மைதானத்திற்கு சமமாக இருக்கும். இதனை பயன்படுத்துவதால் கடலில் வாழும் அரிய வகை உயிரினங்கள் உயிரிழக்க நேரிடும்.
மேலும் சுருக்குமடி வலையை அனுமதித்தால் ஏனைய மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சுருக்குமுடி வலையை பொறுத்தவரையில், மற்ற மாநிலங்கள் எப்படி அனுமதி அளிக்கின்றது என தெரியவில்லை தமிழகத்தை பொறுத்தவரையில் கடல் வளம் மற்றும் லட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பிரதானமாக உள்ளது என புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதனை அடுத்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்தலாம்.
பதிவு செய்யப்பட்ட படகு மட்டுமே சுருக்கும்படி வலையை பயன்படுத்த வேண்டும். காலை எட்டு மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு மீனவர்கள் திரும்ப வேண்டும். மேலும் படகுகளை கண்காணிப்பதற்காக ட்ராக்கிங் கருவியை பொருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.