#Breaking:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 18 எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை..!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.காணொலி வாயிலாக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,விடுதலை சிறுத்தைக் கட்சி,முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்,பாஜக-வை தோற்கடிக்கும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
Former Prime Minister Dr Manmohan Singh and Congress leader Rahul Gandhi are also participating in the Opposition leaders’ meeting with Congress interim chief Sonia Gandhi. pic.twitter.com/PaxU1RVtiP
— ANI (@ANI) August 20, 2021
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,விவசாயிகள் பிரச்சனை,பெட்ரோல் டீசல் உயர்வு உள்ளிட்ட நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.