#BREAKING: மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி!
மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்ட வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது, 35-40 தொழிலாளர்கள் இருந்ததால், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எனவே, இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் இன்னும் பலரைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
Under Construction railway bridge collapses in #Mizoram , 17 workers dead. pic.twitter.com/D87cGtFSuZ
— Smriti Sharma (@SmritiSharma_) August 23, 2023