#BREAKING: ராணுவ வாகன விபத்தில் 16 வீரர்கள் வீரமரணம்!
வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஜெமாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் பள்ளத்தில் விழுந்து நொறுக்கிய விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கூறப்படுகிறது.