BREAKING: ஊரடங்கை மீறினால் 14 நாள்கள் தனிமை மத்திய அரசு.!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று வரை 909 ஆக இருந்தது. இன்றைய நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளதுகொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கடந்த 24 -ம் தேதி முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில் ஊரடங்கை உத்தரவை மீறி பல மாநிலங்களில் பொதுமக்கள் வெளியில் சுற்றி திரிகின்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும் , அறிவுரை கூறியும் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றன.இதையெடுத்து ஊரடங்கை மீறினால் 14 நாள்கள் தனிமைப்படுத்தபடுவர்கள் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.