அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள் 11 பேர் கைது.
இந்திய கடல் பகுதியில் கப்பலில் நுழைந்த ஈரானை சேர்ந்த 11 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைப் பகுதியான அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈரானியர்கள் 11 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதான 11 ஈரானியர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.மேலும்,ஈரானியர்கள் வந்த கப்பலில் குறிப்பிட்ட அளவிலான போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் அவர்களது கப்பல் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 11 பேரிடம் விசாரணை நடைபெற்றதையடுத்து தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…