#BREAKING: கோவாவில் 11 காங். எம்.எல்.ஏக்களில் 8 பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவல்!
கோவாவில் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்.
கோவா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் இன்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்தை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செக்வேரா, ருடால்ப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர் என கூறப்படுகிறது. 40 பேர் கொண்ட கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 8 பேர் கட்சி மாறுவதால் கட்சி பலம் 3-ஆக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.