கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 19 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையெடுத்து அனைத்து பேருந்து , ரயில்கள் மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து அனைத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் கூலி வேலைகளை செய்து வந்த உத்தரபிரதேசம் , பீகார் , மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களை சார்ந்தவர்கள் தற்போது தங்கள் ஊருக்கு நடைபயணமாக செல்கின்றனர்.
இது குறித்து அந்த கூலி தொழிலார்கள் கூறுகையில் , கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கொடுக்கும் நிர்வாணத்தை இங்கு இருந்து நாங்கள் பெறமுடியாது. காரணம் எங்களுடைய ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை போன்றவை எங்கள் ஊரில் உள்ளது என கூறுகின்றன.
இந்நிலையில் டெல்லி போன்ற மாநிலங்களில் புலம்பெயர்ந்த உத்தரபிரதேச தொழிலாளர்களை அந்தந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உத்தரபிரதேச அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…