#BREAKING: கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி..!
பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள்சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்ற, இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வருகின்ற 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 23-ஆம் தேதி நடத்த இருந்த வேளாண் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்கியுள்ளார்.
டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் 31-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.