#Breaking:சற்று முன்…சுகாதாரத்துறை அமைச்சரை திடீர் பதவி நீக்கம் செய்த பஞ்சாப் முதல்வர்!
பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் 1% கமிஷன் கோரியதாக கூறப்படும் நிலையில்,அவர் மீதான ஊழல் புகார் உறுதியானது.
இந்நிலையில்,தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Punjab CM Bhagwant Mann sacks state’s Health Minister Vijay Singla following complaints of corruption against him. He was demanding a 1% commission from officials for contracts. Concrete evidence found against Singla: Punjab CMO pic.twitter.com/YGFw1SYtzk
— ANI (@ANI) May 24, 2022
இது தொடர்பாக,ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா கூறுகையில்:”ஊழலின் அடிப்படையில் தங்கள் சொந்தக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மை,தைரியம் மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கொண்ட ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சிதான்.அதை முதலில் நாங்கள் டெல்லியில் பார்த்தோம்,தற்போது பஞ்சாப்பில் நாங்கள் காண்கிறோம்.இது முதல்வரின் பாராட்டுக்குரிய முடிவு”,என்று தெரிவித்துள்ளார்.
Aam Aadmi Party is the only party that has the integrity, courage & uprightness to take action against their own on grounds of corruption.
We saw it in Delhi, now we are witnessing it in Punjab.
ZERO TOLERANCE FOR CORRUPTION.
Commendable decision by CM @BhagwantMann
— Raghav Chadha (@raghav_chadha) May 24, 2022