#Breaking:கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்- எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் கேந்திரிய வித்யாலயா சங்கதன், திருத்தப்பட்ட சேர்க்கை வழிகாட்டுதல்களின்படி எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தி ஏற்கனவே வைத்திருந்தது.
மேலும்,மறு உத்தரவு வரும் வரை சிபாரிசு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், தங்கள் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 10 மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு பரிந்துரை செய்யும் நடைமுறை இருந்து வந்த நிலையில்,தற்போது எம்பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Kendriya Vidyalaya Sangathan scraps discretionary quota of MPs for admission in Kendriya Vidyalayas as per revised admission guidelines which’ve no mention of quotas for MPs for admission into KVs
Earlier this month, KVS had put on hold discretionary quotas for admissions to KVs pic.twitter.com/kpFKq7dukp
— ANI (@ANI) April 27, 2022