#Breaking:அச்சம் வேண்டாம்…ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி
ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்.
உக்ரைன் -ரஷ்யா இடையே நேற்று முதல் போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வரவேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு வருகை புரிந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது பெற்றோர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
இதனிடையே,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.