பிரேசில்-இந்தியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- பிரேசில் அதிபர் பொல்சொனரோ மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது.
- இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர்.இதனையடுத்து நேற்று பிரேசில் அதிபர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசினார்.இதன் பின் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோவை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர்.அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் அரசு மரியாதை வழங்கப்பட்டது.இதையடுத்து பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் வர்த்தகம் இணையதள பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட15 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், பிரேசில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பிரேசில் அதிபரின் வருகையால் இந்தியா மற்றும் பிரேசில் உறவில் புதிய அத்தியாயம் உருவாகும் என்று பேசினார்.இதேபோல் பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ பேசுகையில்,ஏற்கனவே இந்தியா மற்றும் பிரேசில் இடையே வலுவான இருந்து வருகிறது. 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் உறவு மேலும் வலுவடையும் என்று பேசினார்.