பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தது காணப்படும்.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் மட்டும் ஆபத்தான மற்றும் இக்கட்டான நிலையில் பல குழந்தைகள் இரண்டு அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.கடந்த மூன்று தினங்களாக 43க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.ஆனால் இதன் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளது.மேலும் 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகை ஆகும்.
இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…