பிரம்மோஸ்: சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி.!
பிரம்மோஸ் ஈரோஸ்பேஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஏவுகணை தாக்குதலானது கடலில் இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு ஆற்றலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
INS Mormugao, the latest guided-missile Destroyer, successfully hit ‘Bulls Eye’ during her maiden #Brahmos Supersonic cruise missile firing. The ship and her potent weapon, both indigenous, mark another shining symbol of #Aatmanirbharta and Indian Navy’s firepower at sea. pic.twitter.com/1KPqIcQ7Y8
— Western Naval Command (@IN_WNC) May 14, 2023
இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் அல்லது தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.
பிரம்மோஸ் ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும். இந்தியாவும் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரியில், ஏவுகணைக்கு மூன்று பேட்டரிகளை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸுடன் இந்தியா 375 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.