முதியவர்களுக்காக,காருக்குள் கொரோனா தடுப்பூசி மையம் – மும்பை மாநகராட்சி..!

Default Image

மும்பையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், காருக்குள் அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதியை பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி,முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்,சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து,மே 1 முதல் 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பல மாநிலங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மேலும்,கொரோனா தடுப்பூசி மையங்களும் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளது,இதனால் தடுப்பூசி மையங்களில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் மும்பை மாநகராட்சியானது கொரோனா தடுப்பூசி மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த,மும்பையின் தாதர் வெஸ்டில் உள்ள கோஹினூர் வாகன நிறுத்துமிடத்தில் மே 5 ஆம் தேதி தனது முதல் டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தை திறந்துள்ளது.அதாவது,45 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காருக்குள் அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதியை பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) அறிமுகப்படுத்தியுள்ளது.

7 பிரிவுகள் உள்ள இந்த தடுப்பூசி மையத்தில் மாற்றுதிறனாளிகளுக்கும்,45 வயதுக்கு மேற்பட்டவர்களில் கோவிஷீல்ட்டின் இரண்டாவது டோஸுக்கு தகுதியுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும்,விரைவில் மும்பையின் பிறப் பகுதிகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்