தனது 22 வயது காதலியைக் கத்தியால் குத்திவிட்டு, பணம் மற்றும் நகைகளுடன் காதலன் தப்பிச் சென்றதாக கௌசாம்பியின் சராய் அகில் காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர்.
அம்வா கிராமத்தில் வசிப்பவர்கள் நேற்று காலை வயல்வெளியில் ஒரு பெண் காயமடைந்து ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்தப் பெண்ணுக்கு பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், அருகில் கத்தி ஒன்றும் காணப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவரது பையில் இருந்த ஆவணங்களின்படி, அந்த பெண் அதே பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாரை அகில் போலீசார், அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து பெண்ணின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கடந்த புதன்கிழமை மாலை குறித்த அப்பெண் தனது காதலனுடன் வீட்டைவிட்டு தப்பிச் சென்றதாகவும், மேலும் அவரது வீட்டில் இருந்து சில பணம், நகைகள் மற்றும் துணிகளை எடுத்துச் சென்றதாகவும் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சராய் அகில் காவல் நிலையத்தின் எஸ்ஹோ சுனில் குமார் சிங் கூறினார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…