ட்விட்டரில் வைரலாகும் #BoycottMaldives ஹேஷ்டேக்..!

Published by
murugan

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயணம் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில்” இயற்கை அழகுடன் லட்சத்தீவின் அமைதி மனம் மயங்க செய்கிறது. லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என பதிவிட்டார்.

பிரதமர் மோடியின் பயணம் குறித்து மாலத்தீவு இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது” என கூறினார்.

அதேபோல மாலத்தீவு கலை துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்தும், பிரதமர் மோடி இஸ்ரேலின் ஊதுகுழல் என விமர்சனம் செய்தார். மாலத்தீவு மற்றொரு அமைச்சரும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.  இதையடுத்து மாலத்தீவு 3 அமைச்சர்களும்  தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில்  பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய்குமார், கங்கனா ரனாவத், சல்மான் கான் உள்ளிட்ட பலர் லட்சத்தீவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.  இந்நிலையில், ‘மாலத்தீவை புறக்கணிப்போம்’ #BoycottMaldives என்ற ஹேஷ்டேக்   ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Published by
murugan

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

5 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

5 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

6 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

8 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

8 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

9 hours ago