Chungreng Koren : பிரதமர் மோடி ஒருமுறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரனின் வீடியோ கிளிப் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இன வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்ரிக்ஸ் ஃபைட் நைட் (எம்எஃப்என்) சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு, அதில் சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரனிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அந்த பேட்டியில் அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க மணிப்பூர் வன்முறை குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி, அந்த வீடியோவில் குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரன் கூறியதாவது, மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையால் மணிப்பூர் மக்கள் பலர் உயிரிழந்து வரும் நிலையில், பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தயவு செய்து ஒரே ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கு வந்து அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது எனது தாழ்மையான வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…