இன்று நடைபெறவுள்ள புத்தர் ஞானம் பெற்ற தினமான புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த புத்த பூர்ணிமா விழாவானது இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழா இந்தியா மட்டுமல்லாமல் நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புத்த பூர்ணிமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரை கவுரவப்படுத்தும் விதமாக, புத்த பூர்ணிமா விழா இன்று கொண்டாடப்பபட உள்ளது.
இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளார். இவ்விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள பௌத்த சங்கங்களின் அனைத்து தலைவர்கள் பங்கேற்கும் இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்வை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் புத்தரின் முக்கிய கோவில்களான நேபாளத்தில் உள்ள புனித தோட்ட லும்பினி, இந்தியாவில் உள்ள மகாபோதி கோயில், புத்தகயா, முல்கந்தா குட்டி விஹாரா, சாரநாத், பரிநிர்வண ஸ்தூபம், குஷிநகர், புனித ப்ரதபத்தில் உள்ள ருவன்வேலி மகா சேயா, இலங்கையில் உள்ள பௌந்தநாத், சுயம்பு, நேபாளத்தில் நமோ ஸ்தூபம் மற்றும் பிற பிரபலமான பௌத்த தளங்களில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன்னணி பணியாளர்களுக்காக நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பாரத பிரதமர் மோடியுடன் மத்திய கலாச்சார அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…