ஒத்திவைப்புக்கு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்றத்தில் மீண்டும் அமளி ஏற்பட்டதால் நாளை வரையில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
2023 -2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் துவங்கியது. அதன் பிறகு நேற்று மத்திய பட்ஜெட் 2023-2024-ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற மக்களவை காலையில் துவங்கியது.
இன்று காலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், வெளிநாட்டு குழு ஒன்று நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை கண்காணிக்க வந்துள்ளதாக குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அதானி குழும பங்குகளை எல்ஐசி வாங்கியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
இந்த அமளியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களவையை இன்று மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது தொடங்கிய நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்கட்சிகள் அதானி குழுமம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி கோரியதால் மீண்டும் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதனை அடுத்து நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…