நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை ஏற்கனவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் இருந்தது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி, மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நீண்ட விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய வந்தபோதே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதுபோன்று, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் அமளியால் முடங்கியது
இருப்பினும், இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டும் உள்ளது. அதில், டெல்லி நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இன்று கடைசி நாளான இன்று மக்களவையில் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களில் பெயரை பாரதிய என மாற்றும் மசோதாவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இதனிடையே எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் மக்களவையும் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். அதுமட்டுமில்லாமல், கடைசி நாளான இன்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் காங்கிரேசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…