கடும் அமளி : 7 ஆவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு.!

Default Image

தொடர் அமளி காரணமாக 7 ஆவது நாளாக இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு தனது அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.

மேலும், மாநிலங்களவையும் இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்ததோடு, அதற்கு முன்னர் 11.30 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்துக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் துவங்கியது. அப்பொழுதே, எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே தொடர் அமளி ஏற்பட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்