முறைகேடாக கடன் வழங்கிய வழக்கில் கைதான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சர் ஆகிய இருவரும் 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது 2009-2011 காலகட்டத்தில் வீடியோகான் குழுமத்துக்கு விதிமீறி ரூ.3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவும், இதன் மூலம் அவரும், அவரது கணவர் தீபக் கோச்சர் பயன்பெற்றதாக புகார்கள் எழுந்தது.
இந்த புகார் உறுதியானதை அடுத்து, லைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் பதவி விலகினார். இதனை தொடர்ந்து அமலாக்கதுறையினர் மற்றும் சிபிஐ சாந்தா மற்றும் அவரது கணவர் தீபக் மீது வழக்கு பதிவு செய்து 78 கோடிரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
இதனை தொடர்ந்து, சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சர் ஆகியோரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து, சிபிஐ நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அங்கு, கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாட்கள் (திங்கள் கிழமை வரையில்) சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…