பெண்ணின் உச்சந்தலையில் வாழ்ந்த போட்ஃபிளை லார்வாக்கள்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

Larva

பெங்களூருவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயதான பெண் ஒருவர் ஒரு அரிதான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். இவர் ஒரு வனவிலங்கு பாதுகாவலர் ஆவார்.

இவருக்கு கடந்த ஒரு வார காலமாக வலி மற்றும் உச்சந்தலையில் ஒரு விசித்திரமான ஊர்ந்து செல்லும் உணர்வு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், பெங்களூரில் உள்ள ட்ரைலைஃப் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றார் மோகன் யாதவ்..!

அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண்ணின் உச்சந்தலையில், லார்வாக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அந்த லார்வாவை வெளியில் எடுத்தனர்.

ட்ரைலைஃப் மருத்துவமனையின் ஆலோசகர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராகவேந்திரா கலடகி சவுத் ஃபர்ஸ்டிடம் கூறுகையில், இது ஒரு அரிதான வழக்கு. இந்தியாவில், போட்ஃபிளை தொற்றுகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளி எந்த சிக்கலையும் அனுபவிக்காத நிலையில், நோயாளி நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்