எல்லை விவகாரம்.! இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை.!
லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் நிலையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன இராணுவ வீரர்களுக்குக்கிடையில் கடந்த 15 -ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இதனால், இரு நாடுகளுக்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதன்படி, அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஜூன் 6-ம் தேதி நடந்த முதல் கூட்டத்தில், இரு தரப்பினரும் எல்லையில் வெளியேற ஒப்புக் கொண்டனர். பின்னர், ஜூன் 22 அன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக இரு நாடுகள் தரப்பிலும் கூறப்பட்டது.
இந்நிலையில், லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் அளவிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது. கடைசி நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தையும் சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.