எல்லை விவகாரம் : இன்று இந்தியா – சீன ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை.!
இன்று இந்தியா, சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
லடாக் எல்லையினல் இந்திய-சீன வீரர்கள் இடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனை, இதுவரை சீன அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய-சீனப் படைகள் குவிக்கப்பட்டன. இதனால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு தூதரக அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவில், பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது.
கடந்த திங்கள்கிழமை ரோந்து புள்ளி 15 -யில் இருந்து ராணுவ முகாம்கள் போன்றவற்றை சீன ராணுவம் அப்புறப்படுத்தி பின்வாங்கியது. சமீபத்தில் இருநாட்டு ராணுவமும் எல்லையில் தங்கள் படைகளை விலகி கொண்டது. இரு நாடும் படைகளை விலகி கொண்டதால் சற்று பதற்றம் குறைந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளது. ராணுவ தரப்பில் நடப்பது இது நான்காம் பேச்சுவார்தை என்பது குறிப்பிடத்தக்கது.