எல்லையில் தொந்தரவு: அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

Default Image

எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் எல்லை பாதுகாப்புப் படையின் 18-வது பதக்கம் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீர மரண அடைந்தவர்களுக்கு, துணிச்சலுடன் பணி புரிந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இதன்பின் இந்த விழாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர்ந்த தியாகம் செய்தவர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். இந்திய எல்லையில் சேவையாற்றும் வீரர்களால் தான் உலக வரைப்படத்தில் இந்தியா பெருமைமிக்க இடத்தில் உள்ளது. உலக வரைபடத்தில் இந்தியா தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டு வருகிறது.

இந்தத் துணிச்சலான நெஞ்சம் கொண்டவர்களையும், போர் வீரர்களையும் நம்மால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. எல்லை பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு. நமக்குப் பல சவால்கள் உள்ளன. ஆனால், நமது துணை ராணுவப் படைகள் மீது முழு எனக்கு நம்பிக்கை உள்ளது. முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்பட்டன. பெண்கள் சித்தரவதிக்கப்பட்டன.

இப்போது வங்கதேசம் ஒரு சுதந்திர தேசமாக உள்ளது. அதில் எல்லை பாதுகாப்புப் படை முக்கியப் பங்காற்றியது. பிரதமர் மோடியின் கீழ் நம்மிடம் சுதந்திரமான பாதுகாப்புக் கொள்கை உள்ளது. இதன்மூலம் எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும்.

அனைவருடனும் அமைதியான நட்புறவில் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தனி பாதுகாப்பு கொள்கை எதுவும் இல்லை. பொறுப்பேற்றதும் பிரதமர் இந்தியாவுக்காக ஒரு தனி பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கிய பின்னர் இந்தியாவின் எல்லைகளையும், அதன் இறையாண்மையையும் யாரும் சவால் விடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாத குழுக்களால் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் பயன்படுத்த நாங்கள் தயாராக வேண்டும். இது எல்லைகளைத் தாண்டிய தாக்குதல்களுக்கு ட்ரோன்கள் பயன்படுத்துவதைத் தாண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்