#BREAKING: விண்வெளித்துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.
அதில் , விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயற்கைக் கோள் தயாரிப்பு & அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரோ அமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.