இரண்டு தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், 2 தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்கள், அதிகபட்சம் ரூ.150 வரை மட்டுமே சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் கூறியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…