முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்..! மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்..!
முழுமையாக தடுப்பு செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்டா வகை வைரஸ் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த தொற்றால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் தென் ஆப்பிரிக்காவில் பரவி வந்த இந்த வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்றால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, முழுமையாக தடுப்பு செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும், டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் அனைத்து மாதிரிகளும் ஓமைக்ரான் மரபணு சோதனைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.