நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!
நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ள நிலையில், சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போஸ்டர் டோஸ் போடப்படவுள்ள நிலையில், தனியார் மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்து சுகாதார துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் கடந்தவர்கள் போஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள். முதல் 2 தவணைகளில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதுவே பூஸ்டர் டோஸாக செலுத்தப்பட வேண்டும். தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக அதிகபட்சம் ரூ.150 மட்டுமே வசூலிக்கப்பட்ட வேண்டும். தடுப்பூசி மருந்தின் விலையை தவிர்த்து சேவை கட்டணம் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.