மழையால் சிதைந்த புத்தகங்களை பார்த்து கதறி அழுத மாணவிக்கு கிடைத்த உதவி.
சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் என்ற மாவட்டம் மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான ஒரு பகுதி ஆகும். கோமலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுமியான அஞ்சலி, அங்கு உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த பகுதியில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை பெரிய விஷயம். ஆனால் படிப்பின் மீது ஆர்வம் உள்ள அந்த சிறுமி ஆர்வத்துடன் சென்று பள்ளிக்கு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் லட்சியமே தான் ஒரு செவிலியராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.
கடந்த 5 நாட்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், சிறுமி அஞ்சலி அவரின் பெற்றோர் ஆகியோர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மலை ஓய்ந்த பின் வீடு திரும்பிய அஞ்சலி தனது வீட்டில் உள்ள மற்ற பொருட்களை கருத்தில் கொள்ளாமல், தனது புத்தகங்கள் சேதமடைந்துள்ளதை கண்டு கதறி அழுதுள்ளார்.
இதனை பத்திரிக்கையாளர் முகேஷ் என்பவர் அந்த சிறுமிக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்து, அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, சிறுமிக்கு உதவிடுமாறு தெரிவித்திருந்தார். இந்த பதிவினை பதிவினை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சிறுமிக்கு, ஆறுதலும் ஆதரவும் குவிந்தது.
இதனை தொடர்ந்து, சட்டீஸ்கர் மாநில முதல்வர், பிஜப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சிறுமிக்கு உதவுமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், அடுத்த சில மணி நேரங்களிலேயே வீட்டை சீரமைக்க அஞ்சலியின் குடும்பத்திற்கு 1.1 லட்சம் ரூபாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
மேலும், கல்லூரியில் சேர்த்து படிக்க மாவட்ட நிர்வாகம் உதவி அளிக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்த்து சிறுமி அழும் வீடியோவை நடிகர் சோனு சுட் பார்த்து, கமெண்டில் ‘கண்ணீரைத் துடையுங்கள் சகோதரி, உங்கள் வீடு புத்தகம் எல்லாமே புதிதாக கிடைக்கும்.’ என்று ஆறுதல் கூறியுள்ளார்.
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…