டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு : DNA மூலம் எலும்புகள் உறுதி.!
டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் கிடைக்கபெற்ற எலும்புகள் டிஎன்ஏ சோதனை மூலம் உடல் பாகங்கள் ஷ்ரத்தா உடல் பாகங்கள் தான் என்பது உறுதியாகியுள்ளது.
நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் தற்போது டிஎன்ஏ பரிசோதனை நிறைவடைந்துள்ளது. இதில் கொலையாளி அஃப்தாப் மூலம் கண்டறியப்பட்ட சாரதாவின் உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் உள்ள டிஎன்ஏ-வையும், கொலையுண்ட ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளையும் பயன்படுத்தி கடந்த மாதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில், கிடைத்த உடல் பாகங்கள் ஷ்ரத்தா உடல் பாகங்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.