பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!
Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு
மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.
READ MORE – சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி…புதுச்சேரியில் பரபரப்பு.!
கடந்த 1-ம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
READ MORE – இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்… இந்திய தூதரகம்!
தற்போது, கஃபே வெடிகுண்டு விபத்தில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா.? நிழல் உலக தாதா தொடர்பு இருக்கிறதா என்ற பல்வேறு கோணங்களில் வழக்கு விசாரணையை என்ஐஏ தொடர உள்ளது.