கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! ஒருவர் கைது..!
கூகுளின் மும்பை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே முந்த்வா பகுதியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக அதன் மும்பை அலுவலகலத்திற்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு வந்தவுடன் அலுவலக பணியாளர்கள் அச்சமடைந்ததையடுத்து புனே போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சந்தகத்திற்கு இடமான ஏதும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தவறான அழைப்பு விடுத்த ஹைதராபாத்தை சேர்ந்த சிவானந்த் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரை விசாரணை செய்ததில் தான் போதையில் இருந்த போது இந்த அழைப்பை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டார் என்றும் மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.