டெல்லி உயர்நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.! பாதுகாப்பு தீவிரம்….

Delhi high court bomb threat

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று மிக பெரிய அளவில்  வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ- மெயில் வந்துள்ளது. அதில், இன்று (பிப்ரவரி 15) ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக பெரிய குண்டு வெடிக்கும் என்றும், எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும், அனைத்து அமைச்சர்களையும் வரவழைத்தாலும், அனைவரையும் வெடிகுண்டு வைத்து தர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்- மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா..!

நேற்று மாலை இந்த மின்னஞ்சல் தலைமை பதிவாளர் முகவரிக்கு வந்துள்ளது. இதனை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக 2011 ஆம் ஆண்டு இதே டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

முன்னதாக சில தினங்கள் முன்னர், சென்னை தனியார் பள்ளிகளுக்கு தனி தனியாக வெடிகுண்டு மிரட்டல் வந்து பின்னர் சோதனையில்அது வெறும் மிரட்டல் மின்னஞ்சல் என்பது கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது வரையில் யார் அந்த மின்னஞ்சலை அனுப்பினார்கள் என்பதை சைபர் கிரைம் போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்