டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தகவல்.!
டெல்லி விமான நிலையத்தில் டெல்லியிருந்து புனே செல்லும் விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஜிஎம்ஆர் அழைப்பு மையத்திற்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து, அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளுடன் பாதுகாப்பாக விமானத்திலிருந்த்து இறக்கிவிடப்பட்டனர்.
அதே நேரத்தில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் விமானத்தை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, இதுவரை சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.