பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இன்று காலை பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டதாகவும், மேலும் ஆய்வுக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 6E6482 என்ற விமானதிற்கு இன்று காலை 10.30 மணியளவில் விமானதிற்குல் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்துள்ளது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதி செய்த நெடுவாசல் போலீசாரும், இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோல், ஆகஸ்ட் 18 அன்று டெல்லி-புனே (விஸ்தாரா ஏர்லைன்ஸ்) டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பி வந்ததால், அந்த விமானம் 8 மணி நேரம் தாமதமாகியது