இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் !
இந்தியாவில் நெல்லை உள்ளிட்ட உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நெல்லையிலுள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முகப்பில், போலீசார் மோப்ப நாய்கள் என பெரிய குழுவை நிறுத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம் உட்பட பல அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு குறித்து எச்சரிக்கை மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு – ஓபிஎஸ் வலியுறுத்தல்
இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் அருங்காட்சியகங்களை ஆய்வு செய்தனர், ஆனால் வெடிபொருட்களின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெறிக்கப்பட்டுள்ளது.