Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் இன்று பிற்பகல் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில் “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான்.
முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும். போலீசார் சம்பவ இடத்திலேயே உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கவலைக்கிடமாக இல்லை, ஆனால் பலர் காயமடைந்தனர். சிசிடிவி ஆய்வு செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகளில் ஒருவர் ஓட்டலில் பையை விட்டுச் சென்றுள்ளார் என சித்தராமையா தெரிவித்தார். அந்த பையில் இருந்த பொருள் தான் ஓட்டலில் குண்டு வெடிப்பை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் முதல்வர் டி.கே.சிவகுமார், “எங்கள் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். யார், ஏன் செய்தார்கள். இது வணிகப் போட்டியா? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. அனைத்து வீடியோக்களும் உள்ளன. எங்களிடம் 2-3 கிமீ சுற்றளவில் பயணித்தவர்களின் தகவல் உள்ளது. பீதி அடையத் தேவையில்லை என கூறினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…