மீண்டும் மணிப்பூரில் வெடிகுண்டு வெடித்தது.!
- மணிப்பூர் மாநிலம் இம்பால் நகர் நாகமாபால் ரிம்ஸ் சாலையில் இன்று காலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
- எந்தவித உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரின் மேற்கே உள்ள நாகமாபால் ரிம்ஸ் சாலை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. வெடிகுண்டு வெடித்த நேரம் காலை என்பதால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வெடிகுண்டு வைத்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இதற்கு முன் கடந்த டிசம்பர் 29-ம் தேதி இம்பால் நகரில் உள்ள தங்கல் மார்க்கெட் பகுதியில் அதிகாலை ஒரு வெடிகுண்டு வெடித்தது. அதிகாலை என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் தொடர்ந்து வெடிகுண்டு வெடித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.