எரிவாயு குழாய் மீது குண்டு வெடிப்பு – குஜராத்தில் ஒருவர் பலி!
குஜராத் மாநிலத்தில் எரிவாயு குழாய் மீது ஏற்பட்ட குண்டுவெடிப்பால் ஒருவர் பலியாகி உள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்னும் பகுதியில் எரிவாயு குழாய் மீது ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அந்த இடத்தில் அருகில் இருந்த ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். பாரத் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தில் உள்ள எரிவாயு குழாய் ஒன்றில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும் இந்த குண்டு வெடிப்பால் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரக்கூடிய ஒருவர் உயிரிழந்ததாகவும் வீடுகளும் இரண்டு நாசமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு கசிவு தான் இந்த குண்டு வெடிப்பு உருவாக காரணமாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ள அதிகாரிகள், விபத்து நடந்த எரிவாயு குழாய் ஓஎன்ஜிசிக்கு சொந்தமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவர்கள் இருவரும் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.