மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு விபத்து! 3 பேர் பலி!

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கயர்தலா பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

Murshidabad bomb blast

மேற்கு வங்கம் : முர்ஷிதாபாத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியள்ளது. இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை இரவு கயர்தலா பகுதியில் நடந்தது எனவும், வெடித்த அந்த வெடிகுண்டுகள் நாட்டு வெடிகுண்டுகள் எனவும்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வெடி சத்தம் அதிகமாக இருந்ததால், விபத்து நடந்த வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.  சத்தம் அதிகமாக இருந்த காரணத்தால் உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவலை கொடுத்தனர். இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்த மூவரில் மொல்லா, சகிருல் சர்க்கார் மற்றும் முஸ்தாகின் ஷேக் ஆகியோர் அடங்குவர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாமுன் மொல்லா என்பவர் தன்னுடைய வீட்டில் வெடிகுண்டுகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.  அப்படி தயாரிக்கும்போது வெடிகுண்டு வெடித்ததாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இருப்பினும் இன்னும் தெளிவான விவரம் வெளியாகவில்லை.  எனவே, தெளிவான காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும் என்பதால் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கூடுதல் ஆணையர்களை நியமனம் செய்து போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், இதைப்போலவே,  கடந்த வாரம், குஜராத்தின் அங்கலேஷ்வரில், பருச்சில் உள்ள தொழிற்சாலை பகுதியில் உள்ள கழிவு சுத்திகரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்