போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா ? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.
கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். தன் மகன் மரணத்தில் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கிஷோர் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாட்னா போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை பீகார் அரசு, சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரை செய்ததை அடுத்து, சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. பாட்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா சக்ரபோர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ரியா சக்ரபோர்த்தியின் மொபைலில் அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து தெரிய வந்துள்ளது. அதில், அதிகம் விலை உள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரியா பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதனால், ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உட்பட சிலர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், ரியா அவரது மொபைல் மூலம் கண்டறியப்பட்ட தகவலின்படி கிலோ கணக்கில் போதைப் பொருட்கள் வாங்கி அதனை பாலிவுட் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு சப்லை செய்துள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. இதனால், போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா ? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…